» உரிச்சொல் மரபு

௫௰௫)

ஒண்பேர் வினையொடுந் தோன்றி யுரிச்சொலிசை
பண்பு குறிப்பாற் பரந்தியலும் - எண்சேர்
பலசொல் லொருபொருட் கேற்றுமொரு சொற்றான்
பலபொருட் கேற்றவும் பட்டு

௫௰௬)

கம்பலை சும்மை கலியழுங்கல் ஆர்ப்பரவம்
நம்பொடு மேவு நசையாகும் - வம்பு
நிலையின்மை பொன்மை னிறம்பசலை என்ப
விலைநொடை வாளொளியாம் வேறு

௫௰௭)

விரைவு விளக்கம் மிகுதி சிறப்பு
வரைவு புதுமையுடன் கூர்மை - புரைதீர்
கரிப்பையங் காப்பச்சந் தேற்றமீ ராருந்
தெரிக்கிற் கடிசொற் றிறம்

௫௰௮)

வெம்மை விருப்பாம் வியலகல மாகுமரி
யைம்மையெய் யாமை யறியாமை - கொம்மை
யிளமை நளிசெறிவாம் ஏயேற்றம் மல்லல்
வளமை வயம்வலியாம் வந்து

௫௰௯)

புரையுயர் பாகும் புனிறீன் றணிமை
விரைவாங் கதழ்வுந் துனைவுங் - குரையொலியாஞ்
சொல்லுங் கமமுந் துவன்று நிறைவாகும்
எல்லும் விளக்க மெனல்

Advertisement