» நகரச் சிறப்பு

ஆசிரியர் : கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
௩)

வெள்ளை யுப்பின் கொள்ளை சாற்றி
நெல்லொடு வந்த வல்லாய்ப் பஃறி ...30
பணைநிலைப் புரவியின் அணைமுதற் பிணிக்கும்
கழிசூழ் படப்பைக் கலியாணர்ப்
பொழிற் புறவிற் பூந்தண்டலை
மழைநீங்கிய மாவிசும்பின்
மதிசேர்ந்த மகவெண்மீன் ...35
உருகெழுதிறல் உயர்கோட்டத்து
முருகமர்பூ முரண்கிடக்கை
வரியணிசுடர் வான்பொய்கை
இருகாமத் திணையேரிப்
புலிப்பொறிப் போர்க்கதவின் ...40
திருத்துஞ்சுந் திண்காப்பிற்
புகழ்நிலைஇய மொழிவளர
அறநிலைஇய அகனட்டிற்
சோறுவாக்கிய கொழுங்கஞ்சி
யாறுபோலப் பரந்தொழுகி ...45
ஏறுபொரச் சேறாகித்
தேரொடத் துகள் கெழுமி
நீறாடிய களிறுபோல
வேறுபட்ட வினையோவத்து
வெண்கோயில் மாசூட்டுந் ...50
தண்கேணித் தகைமுற்றத்துப்
பகட்டெருத்தின் பலசாலைத்
தவப்பள்ளித் தாழ்காவின்
அவிர்சடை முனிவர் அங்கி வேட்கும்
ஆவுதி நறும்புகை முனைஇக் குயில்தம் ...55
மாயிரும் பெடையோ டிரியல் போகிப்
பூதங் காக்கும் புகலருங் கடிநகர்த்
தூதுணம் புறவொடு துச்சிற் சேக்கும்
முதுமரத்த முரண் களரி

Advertisement