» பகைவரது நாட்டைப் பாழ்படுத்துதல்

ஆசிரியர் : கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
௰௬)

தண்பணை எடுப்பி
வெண்பூக் கரும்பொடு செந்நெல் நீட ...240
மாவிதழ்க் குவளையொடு நெய்தலும் மயங்கிக்
கராஅங் கலித்த கண்ணகன் பொய்கைக்
கொழுங்காற் புதவமொடு செருந்தி நீடிச்
செறுவும் வாவிய மயங்கி நீரற்று
அறுகோட் டிரலையொடு மான்பிணை உகளவும் ...245
கொண்டி மகளிர் உண்டுறை மூழ்கி
அந்தி மாட்டிய நந்தா விளக்கின்
மலரணி மெழுக்க மேறிப் பலர்தொழ
வம்பலர் சேக்கும் கந்துடைப் பொதியிற்
பருநிலை நெடுந்தூண் ஒல்கத் தீண்டிப ...250
பெருநல் யானையொடு பிடிபுணர்ந் துறையவும்
அருவிலை நறும்பூத் தூஉய்த் தெருவின்
முதுவாய்க் கோடியர் முழவொடு புணர்ந்த
திரிபுரி நரம்பின் தீந்தொடை யோர்க்கும்
பெருவிழாக் கழிந்த பேஎமுதிர் மன்றத்துக் ...255
சிறுபூ நெருஞ்சியோ டறுகை பம்பி
அழல்வா யோரி அஞ்சுவரக் கதிர்ப்பவும்
அழுகுரற் கூகையோ டாண்டலை விளிப்பவும்
கணங்கொள் கூளியொடு கதுப்பிகுத் தசைஇப்
பிணந்தின் யாக்கைப் பேய்மகள் துவன்றவும ...260
கொடுங்கால் மாடத்து நெடுங்கடை துவன்றி
விருந்துண் டானாப் பெருஞ்சோற் றட்டில்
ஒண்சுவர் நல்லில் உயர்திணை யிருந்து
பைங்கிளி மிழற்றும் பாலார் செழுநகர்த்
தொடுதோ லடியரி துடிபடக் குழீஇக் ...265
கொடுவி லெயினர் கொள்ளை யுண்ட
உணவில் வறுங்கூட் டுள்ளகத் திருந்து
வளைவாய்க் கூகை நன்பகற் குழறவும்
அருங்கடி வரைப்பின் ஊர்கவி னழியப்
பெரும்பாழ் செய்தும் அமையான்

Advertisement