» பலவகைக் கொடிகளின் காட்சி

ஆசிரியர் : கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
௯)

மையறு சிறப்பின் தெய்வஞ் சேர்த்திய
மலரணி வாயிற் பலர்தொழ கொடியும ...160
வருபுனல் தந்த வெண்மணற் கான்யாற்று
உருறுகெழு கரும்பின் ஓண்பூப் போலக்
கூழுடைக் கொழுமஞ்சிகைத்
தாழுடைத் தண்பணியத்து
வாலரிசிப் பலிசிதறிப் ...165
பாகுகுத்த பசுமெழுக்கிற்
காழூன்றிய கவிகிடுகின்
மேலூன்றிய துகிற்கொடியும்
பல்கேள்வித் துறைபோகிய
தொல்லாணை நல்லாசிரியர் ...170
உறழ்குறித் தெடுத்த உருகெழு கொடியும்
வெளிலிளக்குங் களிறுபோலத்
தீம்புகார்த் திரைமுன்றுறைத்
தூங்குநாவாய் துவன்றிருக்கை
மிசைச்கூம்பி னசைச்கொடியும் ...175
மீந்தடிந்து விடக்கறுத்து
ஊன்பொரிக்கும் ஒலிமுன்றில்
மணற்குவைஇ மலர்சிதறிப்
பலர்புகுமனைப் பலிப்புதவின்
நறவுநொடைக் கொடியோடு ...180
பிறபிறவு நனிவிரைஇப்
பல்வே றுருவிற் பதாகை நீழல்
செல்கதிர் நுழையாச் செழுநகர் வரைப்பிற்

Advertisement