» மகளிர் வெறியாடி விழாக் கொண்டாடும் ஆவணம்

ஆசிரியர் : கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
௮)

குறுந்தொடை நெடும்படிக்காற்
கொடுந்திண்ணைப் பஃறகைப்பிற்
புழைவாயிற் போகிடைகழி
மழைதோயும் உயர்மாடத்துச் ...145
சேவடிச் செறிகுறங்கிற்
பாசிழைப் பகட்டல்குல்
தூசிடைத் துகிர்மேனி
மயிலியல் மானோக்கிற்
கிளிமழலை மென்சாயலோர ...150
வளிநுழையும் வாய்பொருந்தி
ஓங்குவரை மருங்கின் நுண்தா துறைக்கும்
காந்தளந் துடுப்பிற் கவிகுலை யன்ன
செறிதொடி முன்கை கூப்பிக் செவ்வேள்
வெறியாடு மகளிரொடு செறியத் தாஅய்க் ...155
குழலகவ யாழ்முரல
முழவதிர முரசியம்ப
விழவறா வியலாவணத்து

Advertisement