» வளம் பல நிறைந்த தெருக்கள்

ஆசிரியர் : கடியலூர் உருத்திரங் கண்ணனார்.
௰)

செல்லா நல்லிசை யுமரர் காப்பின்
நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும் ...185
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
தென்கடல் முத்துங் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயுனும். ...190
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்

Advertisement