» வண்டிக்காரன் பாட்டு

ஆசிரியர் : மகாகவி பாரதியார்.

அண்ணனுக்கும் தம்பிக்கும் உரையாடல்

௧)

''காட்டு வழிதனிலே-அண்ணே!
கள்ளர் பயமிருந்தால்?''எங்கள்
வீட்டுக் குலதெய்வம்-தம்பி
வீரம்மை காக்குமடா!''

௨)

''நிறுத்து வண்டி யென்றே-கள்ளர்
நெருங்கிக் கேட்கையிலே''-''எங்கள்
கறுத்த மாரியின் பேர்-சொன்னால்
காலனும் அஞ்சுமடா!''