» அல்ல பத்து

ஆசிரியர் : மதுரைக் கூடலூர் கிழார்.
௪௰௧)

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
நீரறிந்து ஒழுகாதான் தாரம் அல்லன்

௪௰௨)

தார(ம்)மா ணாதது வாழ்க்கை யன்று

௪௰௩)

ஈரலில் லாதது கிளைநட் பன்று

௪௰௪)

சோராக் கையன் சொன்மலை யல்லன்

௪௰௫)

நேரா நெஞ்சத்தோன் நட்டோ ன் அல்லன்

௪௰௬)

நேராமற் கற்றது கல்வி யன்று

௪௰௭)

வாழாமல் வருந்தியது வருத்தம் அன்று

௪௰௮)

அறத்தாற்றின் ஈயாத(து) ஈனை யன்று

௪௰௯)

திறத்தாற்றின் நேர்லா ததுநோன் பன்று

௫௰)

மறுபிறப் பறியா ததுமூப் பன்று