» சிறந்த பத்து

ஆசிரியர் : மதுரைக் கூடலூர் கிழார்.
௧)

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
ஓதலிற் சிறந்தன்று ஒழுக்கம் உடைமை

௨)

காதலிற் சிறந்தன்று கண்ணஞ்சப் படுதல்

௩)

மேதையிற் சிறந்தன்று கற்றது மறவாமை

௪)

வண்மையிற் சிறந்தன்று வாய்மை உடைமை

௫)

இளமையிற் சிறந்தன்று மெய்பிணி யின்மை

௬)

நலனுடை மையின் நாணுச் சிறந்தன்று

௭)

குலனுடை மையின் கற்புச் சிறந்தன்று

௮)

கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று

௯)

செற்றாரைச் செறுத்தலின் கற்செய்கை சிறந்தன்று

௰)

முற்பெரு கலின்பின் சிறுகாமை சிறந்தன்று