» துவ்வாப் பத்து

ஆசிரியர் : மதுரைக் கூடலூர் கிழார்.
௩௰௧)

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பழியோர் செல்வம் வறுமையில் துவ்வாது

௩௰௨)

கழிதறு கண்மை பேடியின் துவ்வாது

௩௰௩)

நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது

௩௰௪)

பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது

௩௰௫)

செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது

௩௰௬)

பொய்வே ளாண்மை புலைமையின் துவ்வாது

௩௰௭)

கொண்டுகண் மாறல் கொடுமையின் துவ்வாது

௩௰௮)

அறிவிலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது

௩௰௯)

இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது

௪௰)

தானோர் இன்புறல் தனிமையின் துவ்வாது