» நல்கூர்ந்த பத்து

ஆசிரியர் : மதுரைக் கூடலூர் கிழார்.
௮௰௧)

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
முறையில் அரச(ன்) நாடு நல்கூர்ந் தன்று

௮௰௨)

மிகமூத்தோள் காமம் நல்கூர்ந் தன்று

௮௰௩)

செற்றுடன் உறவோனைச் சேர்தல்நல் கூர்ந்தன்று

௮௰௪)

பிணிகிடந்தோன் பெற்ற இன்பம்நல் கூர்ந்தன்று

௮௰௫)

தன்போற் றாவழிப் புலவிநல் கூர்ந்தன்று

௮௰௬)

முதிர்வுடை யோன்மேனி அணிநல் கூர்ந்தன்று

௮௰௭)

சொற்சொல் லாவழிச் சொலவுநல் கூர்ந்தன்று

௮௰௮)

அகம்வறி யோன்நண்ணல் நல்கூர்ந் தன்று

௮௰௯)

உட்(கு)இல் வழிச்சினம் நல்கூர்ந் தன்று

௯௰)

நட்(பு)இல் வழிச்சேறல் நல்கூர்ந் தன்று