» பழியாப் பத்து

ஆசிரியர் : மதுரைக் கூடலூர் கிழார்.
௨௰௧)

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
யாப்பி லோரை இயல்குணம் பழியார்

௨௰௨)

மீப்பி லோரை மீக்குணம் பழியார்

௨௰௩)

பெருமை உடையதன் அருமை பழியார்

௨௰௪)

அருமை யுடையதன் பெருமை பழியார்

௨௰௫)

நிறையச் செய்யாக் குறைவினை பழியார்

௨௰௬)

முறையில் அரசர்நாட் டிருந்து பழியார்

௨௰௭)

செய்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார்

௨௰௮)

அறியாத் தேசத்து ஆசாரம் பழியார்

௨௰௯)

வறியோன் வள்ளியன் அன்மை பழியார்

௩௰)

சிறியோர் ஒழுக்கம் சிறந்தோரும் பழியார்