» பொய்ப் பத்து

ஆசிரியர் : மதுரைக் கூடலூர் கிழார்.
௬௰௧)

ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
பேரறவி னோன்இனிது வாழா மைபொய்

௬௰௨)

பெருஞ்சீர் ஒன்றன் வெகுளியின் மைபொய்

௬௰௩)

கள்ளுண் போன்சோர்வு இன்மை பொய்

௬௰௪)

காலம்அறி யாதோன் கையுறல் பொய்

௬௰௫)

மேல்வரவு அறியாதோன் தற்காத் தல்பொய்

௬௰௬)

உறுவினை காய்வோன் உயர்வுவேண் டல்பொய்

௬௰௭)

சிறுமைநோ னாதோன் பெருமைவேண் டல்பொய்

௬௰௮)

பெருமைநோ னாதோன் சிறுமைவேண் டல்பொய்

௬௰௯)

பொருள்நசை வேட்கையோன் முறைசெயல் பொய்

௭௰)

வாலியன் அல்லாதோன் தவம்செய் தல்பொய்