» அரசன் படுக்கையில் கண்பொருந்தாது சிந்தனையில் ஆழ்தல்

ஆசிரியர் : நப்பூதனார்.
௰)

மத்திகை வளைஇய, மறிந்து வீங்கு செறிவு உடை,
மெய்ப்பை புக்க வெரு வரும் தோற்றத்து, ...60
வலி புணர் யாக்கை, வன்கண் யவனர்
புலித் தொடர் விட்ட புனை மாண் நல் இல்,
திரு மணி விளக்கம் காட்டி, திண் ஞாண்
எழினி வாங்கிய ஈர் அறைப் பள்ளியுள்
உடம்பின் உரைக்கும், உரையா நாவின், ...65
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக,
மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது,