» படர்க்கை

பேசுபவர் தன்னையும் தனக்கு முன்னால் நிற்பவர்களையும் தவிர்த்து பிறரைக் குறிக்கும் சொல் படர்க்கை எனப்படும்

எடுத்துக்காட்டு:
* அவன் - (ஒருமை, ஆண்பால்)
* அவள் - (ஒருமை, பெண்பால்)
* அவர் - (மரியாதைப் பன்மை / பன்மை)
* அவர்கள் - (பன்மை)
* அது - (ஒருமை, ஒன்றன்பால்)
* அவை - (பன்மை, பலவின்பால்)
* கணேசன் - (ஒருமை, ஆண்பால்)
* வள்ளி - (ஒருமை, பெண்பால்)
* மாணவன் - (ஒருமை, ஆண்பால்)
* மாணவி - (ஒருமை, பெண்பால்)
* மாணவர்கள் - (பன்மை, பலர்பால்)
* பசு - (ஒருமை, ஒன்றன்பால்)
* பசுக்கள் - (பன்மை, பலவின்பால்)
* வீடு - (ஒருமை, ஒன்றன்பால்)

Advertisement