» சொற்பயன்பாடு

ஒரு மொழியின் அமைப்பில் சொல்லமைப்பும், தொடரமைப்பும் முக்கியமான அமைப்புகளாகக் கருதப்படுகின்றன. அவ்வமைப்புகளில் பயன்படுத்தப்படும் சொற்பயன்பாடு உரையாசிரியர்களால் பல்வேறு சூழ்நிலைகளில் எடுத்துக்காட்டாக கையாண்டிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். மொழி அமைப்பில் சிறப்பான பொருள் விளக்கத்திற்கும் சொற்பயன்பாடு இன்றியமையாததாகிறது.
தொல்காப்பியர் நடையில் சொற்பயன்பாடு பற்றிக் கூறும்பொழுது,
"உரை வகை நடையே ஆசிரிய நடைத்தே வெண்பா நடைத்தே" என்று உரையையும் செய்யுளையும் கருதுவது நோக்கத்தக்கது.