» சகரயெதுகை

ஆசிரியர் : மண்டல புருடர்.
௨௰௫)

பாசனம் மென்ப சுற்றம் பாண்டம் உண்கலமும் பன்னும்
வாசமே யிருப்பிடம் பூமணம் புள்ளின் சிறகு தூசாம்
கோசமே மதிலுருப் பாண்குறி முட்டை முறை பண்டாரம்
தேசிகன் வணிகன் றேசாந்திரியொடு குருவுமாமே

௨௰௬)

மூசல் மொய்த்திடல் சாவென்ப முடலையே திரட்சி யுண்டை
கீசகங் குரங்கு வேயாங் கேழ் நிறமொளி யொப்பாகும்
வீசலேயெறிதலீவாம் வெம்மை யுட்டணம் விருப்பம்
கேசர மகிழ்பூந்தாதாங் கிருட்டியொ ரீற்றாப் பன்றி

௨௰௭)

அசி படைக்கலமே வாளே அவமதிச் சிரிப்பு முப்பேர்
நிசி யிரா மஞ்சள் பொன்னாம் நீர் புனல் குணம் பூராடம்
பிசியென்ப பொய்யும் சோறும் பேசரும் பொருளு முப்பேர்
சுசி கோடைசுத்தந் தீயாஞ் சுடர் விளக் கிரவி யங்கி

௨௰௮)

ஆசென்ப விரைவு குற்றம் அற்ப மெய்க்கவச நாற்பேர்
காசென்ப கோழை குற்றங் கதிர்விடு மணி முப்பேரே
ஆசினி பலாவிசேடம் மரவுரி மரக்காழ் விண்ணாம்
தேசிக மழகு காந்தி திசைச்சொல் லோர்கூத்துச் செம்பொன்

௨௰௯)

பச்சையே மரகதம் தோல் பரிமளப் புதல் மால் புந்தி
கச்சை யென்பது தழும்பு கயிறொடு கவச முப்பேர்
செச்சைமை வெட்சி தேய் வைதிகையென்ப திசை சுணங்காம்
மிச்சையே பொய்த்தாலாகு மிடித்தலஞ் ஞானமுப்பேர்

௩௰)

பிச்ச மாண்மயிரும் பீலிக்குடையும் வெண்குடையுமாகும்
கச்சம் யானைக்கழுத்திற் கய றளவொடு மரக்கால்
எச்சமே குறை சேயாக மிகமென்ப மரக்கோடி யானை
அச்சமே யகத்தியைம் மை யஞ்சலிம்முப் பேராமே

௩௰௧)

ஆசையே திசை பொன் அன்பாம் ஆகுலம் வருத்த மோசை
காசையே காயா நாணல் காமர் தா னழகு காதல்
பாசமே கயிறு கூளி பக ரூசித்துளை அன்பாகும்
தூசென்ப தாடை யானைப் புரசை தூசிப்படைப் பேர்

௩௰௨)

தாசியே பரணி சூளை தளியென்பது துளியே கோயில்
வேசரி கழுதையே கோவேறு வேசரி யுமாகும்
ஆசுகம் பகழி காற்றாம் அந்தரி யுமையே துர்க்கை
கோசிகஞ் சாம வேதங் கூறு பட்டாடைக்கும் பேர்

௩௰௩)

பசுவேறு சீவனாவாம் பாரதி வாணி தோணி
வசுவே ஆன்கன்றும் பொன்னும் வசுக்களுந் தீயு நாற்பேர்
அச மூவாண்டுறு நெல் லாடாம் அணை யென்ப கரையே மெத்தை
சசி யென்ப கர்ப்பூரஞ் சந்திர னயிராணி முப்பேர்

௩௰௪)

விசும்பு பொன் னுலகு மேகம் விண்ணொடு திசையு நாற்பேர்
தசும்பு நற்குட மிடாவாஞ் சாத்தனே அருகன் ஐயன்
இசை புகழ் கிளவி பாட்டாம் ஏங்கலே யொலி யிரங்கல்
பிசுனனே கோளன் பொய்யன் உலோபனும் பேசு முப்பேர்

௩௰௫)

வச்சிரங் சதுரக்கள்ளி வைரமே குலிச முப்பேர்
நொச்சியே சிந்து வார மதில் சிற்றூர் நுவலலாமே
தச்சனே சித்திரைப்பேர் தபதி யென்றானுமாகும்
உச்சி நண்பகலுச் சிப்பேர் உறுப் பவயவ முடம்பாம்

௩௰௬)

பாசென்ப பசுமை மூங்கில் பப்பென்ப பரப்போ டொப்பாம்
மாசென்ப சிறுமை குற்றம் மழை அழுக்கொடு நாற்பேரே
கேசம் பெண்மயிற்கும் ஆண்பாற் மயிற்குங் கிளத்தலாகும்
வாசியே குழன் முன்னா ண்மா வாசி யென் னேவ னாற்பேர்

௩௰௭)

மிசையென்ப துணவு மேடு மீமிசைச் சொல்லு முப்பேர்
விசயமே வென்றி வெல்லம் வெங்கதிர் மண்டலப்பேர்
முசலியே யுடும்பு தாழை முந்திய ராம னோந்தி
வசதி நல்லிட மூர் வீடாம் வர னயன் பரமன் காந்தன்