» பகரயெதுகை

ஆசிரியர் : மண்டல புருடர்.
௱௩௰௨)

உப்பு மெல்லியலா ராடல் உவர் கடல் இனிமை நாற்பேர்
செப்பமே நடுநிலைப்பேர் தெருவொடு நெஞ்சுமாகும்
துப் பரக் கூற்றந் தூய்மை துகிர் பகை யனுபவப் பேர்
கப்பண மிரும்பிற்செய்த நெருஞ்சின்முட் கைவேலாமே

௱௩௰௩)

தாபரம் மலைபோல் நிற்றல் சடமொடு தருவு முப்பேர்
நீப முத்தரட்டாதிப் பேர் நிமித்த நீர்க் கடம்பு மாகும்
யூபமே கவந்தம் வேள்விகுறு தம்பம் படைவகுப்பாம்
சாபமே சபித்தல் வில்லாந் தளிமமே யழகு மெத்தை

௱௩௰௪)

சீப்பென்ப கதவிற் றாழும் சீவு கங்கமுமா மென்ப
நாப்ப ணென்பது தேர்த்தட்டு நடுவும் யாழ்வுறுப்பு முப்பேர்
காப்பென்ப காவலோடு கதவும் வெண்ணீருமாகும்
யாபென்ப கவிதை காட்டாம் இறால் தேன்கூ டெருது மீனே

Advertisement