» ஙகரயெதுகை

ஆசிரியர் : மண்டல புருடர்.
௨௰)

புங்கமே யுயர்ச்சி யம்பு பொரும் அம்பின் குதை முப்பேரே
திங்க ளம்புலி மாதப்பேர் சித்திரன் ஓவன் தச்சன்
கங்கென்ப வரம்பின் பக்கங் கருந்தினை பருந்து மாமே
தொங்கலே பீலிக்குஞ்சந் தூக்கொடு தொடுத்த மாலை

௨௰௧)

சங்கமே கணைக்கா லோரெண் சபை சங்கு புலவர் நெற்றி
பங்கென்ப முடமேயாகும் பாதியுஞ் சனியு மேற்கும்
வங்கமே வெள்ளி நாவாய் வழுதலை ஈயமாமே
அங்கணஞ் சேறு முற்றம் ஆஞ் சலதாரேக்கும் பேர்

௨௰௨)

ஞாங்கர் வேல் பக்க முன்பு மேலென நான்குமாகும்
தூங்கலே நிருத்தம் யானை துயில் சோம்பு தராசு தாழ்தல்
வாங்கலே வளைத்தல் கொள்ளல் வையென்ப கூர்மை வைக்கோல்
வேங்கைபொன் புலி மரப்பேர் வீ நீக்கம் பூப்புள் சாவாம்

௨௰௩)

மங்குல் காரிருள் விண் முப்பேர் மருந் தமுதொடு மருந்தாம்
பங்கியே பிறமயிற்கும் பகருமாண் மயிற்கும் பேராம்
அங்கதம் பன்னகந் தோள் அணியுடன் வசைச் சொல்லாகும்
பங்கமே சேறு தூசு பழுதொடு பின்ன மாமே

௨௰௪)

அங்கமே யுடலுறுப் பென் பாறங்கங் கட்டி லைம்பேர்
பிங்கலம் பொன்னும் பொன்னின் நிறத்தையும் பேசலாகும்
பொங்கரே மரத்தின் கோடு பொருப் புய ரிலவு முப்பேர்
பொங்கலே கொதித்தல் மிக்காம் பொச்சாப்பு மறவி தீதாம்

Advertisement