» உவமை வகை

ஆசிரியர் : தண்டியாசிரியர்.
௩௰௨)

அதுவே,
விரியே தொகையே யிதர விதரம்
உரைபெரு சமுச்சய முண்மை மறுபொருள்
புகழ்த னிந்தை நியம மநியமம்
ஐயந் தெரிதரு தேற்ற மின்சொல்
எய்திய விபரீத மியம்புதல் வேட்கை
பலபொருள் விகார மோக மபூதம்
பலவயிற் போலி யொருவயிற் போலி
கூடா வுவமை பொதுநீங் குவமை
மாலை யென்னும் பால தாகும்

௩௰௩)

அற்புதஞ் சிலேடை யதிசயம் விரோதம்
ஒப்புமைக் கூட்டந் தற்குறிப் பேற்றம்
விலக்கே யேதுவென வேண்டவும் படுமே

௩௰௪)

மிகுதலுங் குறைதலுங் தாழ்தலுந் முயர்தலும்
பான்மாறு படுதலும் பாகுபா டுடைய

௩௰௫)

போல மான புரையப் பொருவ
நேரக் கடுப்ப நகர நகர்ப்ப
ஏர வேய மலைய வியைய
ஒப்ப வெள்ள வுறழ வேர்ப்ப
அன்ன வனைய வமர வாங்க
என்ன விகல விழைய வெதிரத்
துணைதூக் காண்டாங்கு மிகுதகை வீழ
இணைசிவண் கேழற்றுச் செத்தொடு பிறவு
நவைதீர் பான்மை யுவமைச் சொல்லே

Advertisement